ஜம்மு - காஷ்மீரில் ஜி - 20 உச்சி மாநாடு : இந்தியாவின் வெற்றி

By Vishnu

29 Jun, 2022 | 05:03 PM
image

ஜம்மு-காஷ்மீர் ஜி-20 மாநாட்டை நடத்தும் என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு யாரும்; நினைத்திருக்க மாட்டார்கள்.

இருப்பினும், காலம் மாறிவிட்டுள்ளது.  ஆகஸ்ட் 5, 2019 இல் இந்தியாவின் 'பயங்கரவாத தலைநகரம்' என்று அழைக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர், இமயமலைப் பகுதியின் சிறப்பு அந்தஸ்து என்று அழைக்கப்படுவதை இரத்து செய்யும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இதன் பிரகாரம் இன்று இந்தியாவின் சுற்றுலாத் தலைநகராக உருவெடுத்துள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் சுற்றுலாப் பயணிகளின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சர்வதேச வணிக நிறுவனங்கள் ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றது. மறுப்புறம் ஜி-20 உச்சிமாநாட்டை யூனியன் பிரதேசத்தில் நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள ஜி-20 கூட்டங்களின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புக்காக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் தீரஜ் குப்தாவின் கீழ், 5 பேர் கொண்ட அதிகாரத்துவக் குழுவை ஜம்மு-காஷ்மீர அரசாங்கம் அமைத்துள்ளது.

ஜி-20 உச்சிமாநாட்டிற்கான இடமாக ஜம்மு-காஷ்மீரை  தேர்ந்தெடுப்பதன் மூலம், இமயமலைப் பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் அதன் கடைசிக் கட்டத்தில் உள்ளது என்ற தெளிவான செய்தியை இந்திய அரசு சர்வதேச சமூகத்திற்கு அனுப்பியுள்ளது.  அமைதியான ஜம்மு-காஷ்மீரை உலகிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசம் உலகின் மிகவும் வளர்ந்த பிராந்தியங்களில் ஒன்றாக வேகமாக மாறி வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு  காஷ்மீர் எந்த ஒரு பணிநிறுத்தம், தெருப் போராட்டங்கள் மற்றும் கல் வீச்சு சம்பவங்களைச் சந்திக்கவில்லை.

கடையடைப்பு, போராட்டங்கள், ஊர்வலங்கள், தெருக்களில் வன்முறை போன்றவற்றுக்கு நிதியுதவி செய்பவர்கள் காஷ்மீரிகளின் மிகப்பெரிய எதிரிகள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். வன்முறையின் வலிமிகுந்த சகாப்தம் மீண்டும் வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தானின் உத்தரவின் பேரில் அமைதிக்கான பாதையில் இடையூறுகளை உருவாக்கும் சில குண்டர்கள் இன்னும் உள்ளனர்.

ஜி-20 உச்சி மாநாடு ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் என்று அறிவித்ததன் மூலம், இமயமலைப் பகுதி மக்கள் மீதான தனது நேர்மையை புது தில்லி மீண்டும் நிரூபித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பூர்வீகவாசிகளுக்கு இது ஒரு மரியாதையாகும். ஏனெனில் அவர்களின் நிலம் இதுபோன்ற ஒரு முக்கியமான சர்வதேச கூட்டத்தை சந்தித்திருக்க வில்லை. இதில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

ஜி-20 மாநாட்டை நடத்த ஜம்மு காஷ்மீர் தயாராகி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில், பாகிஸ்தான் ஜி-20 குழுவின் ஒரு பகுதியாக இல்லை. ஏனெனில் அது ஒரு ஏழை நாடு. இரண்டாவது இமயமலைப் பகுதி ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசம் என்ற விடயம் காணப்படுகின்றது.

ஆகஸ்ட் 5, 2019க்குப் பிறகு, பாகிஸ்தான் தலைவர்கள், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வதற்கான அழைப்பைத் திரும்பப் பெறுமாறு புது டில்லிக்கு அழுத்தம் கொடுக்க உலகின் ஒவ்வொரு நாட்டிடமும் கோரிக்கை விடுத்தனர். இஸ்லாமிய நாடுகள் உட்பட எந்த தேசமும்  அந்த விடயத்தை கண்டுக்கொள்ள வில்லை.  மாறாக இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்பதை அவர்கள் தெளிவாகக் கூறினர். 

ஜம்மு காஷ்மீரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலளித்த பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 'சர்ச்சைக்குரிய' பிரதேசம் என்றும் ஜி -20 உச்சிமாநாட்டை அங்கு நடத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தான் தங்கள் நலன் விரும்பி என்று இன்னும் நம்பும் காஷ்மீரிகளுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியை வழங்கியிருக்கலாம்.

ஜம்மு காஷ்மீரில்  உச்சிமாநாட்டை நடத்தும் யோசனையை ஜீ-20 உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கைக்கு எந்த உறுப்பு நாடுகளும் கருத்தில் கொள்ள வில்லை.  

 கடந்த இரு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் பல முக்கிய அபிவிருத்தி திட்டங்களை பெற்றுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வணிக நிறுவனங்களுடன் ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதே போன்று பல நாடுகள் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. இந்தியாவின் நிலைப்பாட்டை ஆமோதிப்பதன் மூலம், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் தங்களுக்கு எந்த இரண்டாவது எண்ணமும் இல்லை என்று பாகிஸ்தானுக்கு வலுவான செய்தியை முஸ்லிம் நாடுகள் அனுப்பியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் நடத்தும் ஜி-20 உச்சிமாநாடு இந்தியாவுக்கு ஒரு பெரிய வெற்றியாகவும் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகவும் இருக்கும். ஏனெனில் ஜி-20 உலகின் மிகப்பெரிய முன்னேறிய மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை உள்ளடக்கிய கூட்டணியாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right