பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் ஆதரவு குறித்து இரு தரப்பு கலந்துரையாடல்

By Digital Desk 5

29 Jun, 2022 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பல சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்க ஆதரவின் சாத்தியமான பகுதிகள் குறித்து இலங்கை - அமெரிக்க இரு தரப்பு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஆசியாவிற்கான திறைசேரி துணைச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் தலைமையிலான அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் மற்றும் இராஜாங்கத் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட பிரதிநிதிகளுக்கும் , வெளிவிவகார  செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோருக்கும் (28) செவ்வாய்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் இலங்கை மக்களின் நல்வாழ்வை நோக்கி பங்களிக்கின்ற இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு பங்காளித்துவத்தை வெளிவிவகாரச் செயலாளர் விஜேவர்தன வரவேற்றார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்க திறைசேரித் திணைக்களம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right