பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவர இனம் : பல ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 5

29 Jun, 2022 | 01:41 PM
image

உத்தரகாண்ட் மாநில வனத்துறையினர் மேற்கு இமயமலைப் பகுதியில் அரிய வகை தாவரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

மேற்கு இமயமலைப் பகுதியில் முதன்முறையாக 'யூட்ரிகுலேரியா பர்செல்லாட்டா' என்ற தாவர இனம் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இதே போல, இதுவரை வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 20 தாவர இனங்கள் உத்தரகாண்ட் வனத்துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. 

உலக அளவில் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட முதல் கண்டுபிடிப்பு இதுவாகும். இது உத்தரகாண்ட் வனத்துறைக்கு பெருமைக்குரிய விஷயமாகும் என்று வனத்துறையினர் கூறினர்.

தாவரவியல் துறையில் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகைகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானிய தாவரவியல் இதழிலும் இந்த கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

ஜப்பானிய தாவரவியல் இதழ், தாவர வகைப்பாடு மற்றும் தாவரவியலை அடிப்படையாகக் கொண்ட 106 ஆண்டுகள் பழமையான இதழ் ஆகும்.

உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் மேற்கு இமயமலைப் பகுதி முழுவதுமே இந்த அரியவகை செடியை பார்ப்பது இதுவே முதல்முறை ஆகும். 

ஏனெனில், 1986 க்குப் பிறகு, நம் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த தாவர இனங்கள் சேகரிக்கப்படவில்லை.

இந்த செடி வகை, முன்னதாக செப்டம்பர் 2021 இல் உத்தரகாண்ட் வனத்துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாமோலி மாவட்டத்தின் மண்டல் பள்ளத்தாக்கில் தாவரத்தை கண்டுபிடித்தனர்.

இந்த தாவரத்தில் மேம்பட்ட சில கட்டமைப்புகள் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதன்மூலம், கொசுக்கள், சிறிய தவளைகள் மற்றும் பூச்சிகளைப் பிடித்து உணவாக்கி கொள்வதற்காக, வளர்ந்த கட்டமைப்புகளில் ஒன்றை இந்த செடி வகை பயன்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right