தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை பிள­வு­ப­டுத்த வேண்­டிய எந்­த­வொரு தேவையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கோ அல்­லது அர­சாங்­கத்­திற்கோ கிடை­யாது. இன­வா­தி­க­ளுக்கும் மத்­தி­யஸ்த போக்­குடன் கூடி­ய­வர்­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள கருத்துவேறு­பா­டு­களே நெருக்கடிக்குக் கார­ண­மாகும் என நெடுஞ்­சா­லைகள் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

அர­சியல் கட்­சி­களை பிள­வு­ப­டுத்தும் நிகழ்ச்சிநிரல் எம்­மிடம் இல்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவே கட்சிகளை பிள­வு­ப­டுத்­து­வதில் குறி­யாக இருந்தார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனின் இணைத்தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு கேச­ரிக்கு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை பிள­வு­ப­டுத்­து­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சிலர் குரல் கொடுத்து வரு­கின்­றனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது மிகவும் பல­மான கட்­சி­யாகும். தமிழ் மக்­களின் பிர­தான கட்­சியும் அது­வே­யாகும்.

இத்­த­கைய நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை இரண்­டாக பிள­வுப்­ப­டுத்த வேண்­டிய தேவை எமக்கு கிடை­யாது. தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வினை நாம் வழங்­க­வுள்ளோம். இந்த சந்­தர்ப்­பத்தில் அந்த கட்சி பல­மாக செயற்­பட வேண்டும்.

ஆகையால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினை பிள­வுப்­ப­டுத்த வேண்­டிய எந்­த­வொரு தேவையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கோ அல்­லது அர­சாங்­கத்­திற்கோ கிடை­யாது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இன­வாத போக்­குடன் செயற்­பட கூடி­ய­வர்­க­ளுக்கும் மத்­தி­யஸ்த போக்­கினை கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கும் இடை­யி­லேயே பிரச்­சினை காணப்­ப­டு­கின்­றது.

இந்த இரண்டு தரப்­பு­க­ளுக்கும் பெரும் கருத்து வேறு­பா­டுகள் காணப்படுகின்றன. இதன்காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது. இதனை பிளவு என்று கூறவும் முடியாது. கருத்து வேறுபாடு மாத்திரமேயாகும் என்றார்.