சீன ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவர் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பு

By Digital Desk 5

29 Jun, 2022 | 01:28 PM
image

(ஏ.என்.ஐ)

சீனாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக வாங் ஷெயாஹோங்கை நியமித்துள்ளதாகவும், அந்நாட்டின் காவல்துறையை மேற்பார்வையிடுவதாகவும் சீனா செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வாங் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் நீண்ட கால உறவுகளை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

13வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 35வது அமர்வை சீனா வெள்ளிக்கிழமை (24) பெய்ஜிங்கில் நடத்தியது. கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகள் மீதான திருத்தப்பட்ட சட்டம், கருப்பு மண் பாதுகாப்பு சட்டம், ஏகபோக எதிர்ப்பு சட்டத்தை திருத்துவதற்கான முடிவு மற்றும் நிலைக்குழுவின் நடைமுறை விதிகளை திருத்துவதற்கான முடிவு ஆகியவற்றை ஏற்க இதன் போது வாக்களித்தனர்.

கூட்டத்தில் பணியாளர் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஷென்சியா வோஜியாங்கிற்குப் பதிலாக பான் யூ தேசிய இன விவகார ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right