சீயான் விக்ரமின் 'கோப்ரா' வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Vishnu

29 Jun, 2022 | 01:23 PM
image

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படத்தை தொடர்ந்து வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் கோப்ரா படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கோப்ரா'.

இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'கே ஜி எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மியா ஜோர்ஜ், இர்பான் பதான், பத்மபிரியா, கனிகா, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், பாபு அண்டனி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் மாதம் 11-ம் திகதியன்று இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் வேறு மொழிகளிலும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தையும் அண்மைக்காலமாக தமிழக முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களை பட மாளிகையில் தொடர்ந்து வெளியிட்டு, தயாரிப்பாளர்களுக்கு அதிக சதவீத லாபத்தை அள்ளித்தரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் படமாளிகையில் வெளியாவதாலும், திரில்லர் எக்சன் ஜேனரில் தயாராகி இருப்பதாலும், 'கோப்ரா' படத்திற்கு விக்ரமின் ரசிகர்களை தவிர்த்து, ஏனைய நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்