'பேய காணோம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

29 Jun, 2022 | 12:42 PM
image

சர்ச்சைக்குரிய மொடலிங் மங்கையும், பிக் பொஸ் பிரபலமுமான நடிகை மீரா மிதுன் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'பேய காணோம்' படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் செல்வ அன்பரசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'பேய காணோம்'. 

இதில் நடிகை மீரா மிதுன் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் இயக்குநரும், நடிகருமான தருண்கோபி, நடிகர் கௌஷிக், கோதண்டம், முல்லை, ஜெயா ரி.வி. ஜேக்கப், செல்வகுமார், சண்டை பயிற்சி இயக்குநர் ஜாக்குவார் தங்கம், நடிகை சந்தியா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஓ. எஸ். ராஜ், பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு மிஸ்டர் கோளாறு இசையமைத்திருக்கிறார். 

முழு நீள ஹாரர் கொமடி ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை குளோபல் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேனி பாரத் ஆர் சுருளி வேல் தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' எம்முடைய வாழ்க்கையில் பணத்தைக் காணோம், குழந்தையைக் காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம்.. என காணாமல் போன பல விடயங்களைத் தேடியிருப்போம். 

முதன்முதலாக ஒரு குழு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள்? என்பது தான் படத்தின் திரைக்கதை. நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.'' என்றார்.

இதனிடையே படப்பிடிப்பின் போது கதையின் நாயகியான மீரா மிதுன் பட குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்காததால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை.  

இதன் காரணமாக பல்வேறு தடைகளை கடந்து படப்பிடிப்பு நிறைவடைந்ததையே பட குழுவினர் வெற்றி விழாவாகக் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்தே படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right