ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By Digital Desk 5

29 Jun, 2022 | 12:39 PM
image

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'டீசல்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான சண்முகம் பழனிச்சாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'டீசல்' இதில் நடிகர் ஹரீஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அதுல்யா நடித்திருக்கிறார்.

எம். எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை தேர்ட் ஐ  என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேவராஜுலு மார்க்கண்டேயன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையின் நிறைவு பெற்றது. இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பெற்றோல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் இளைஞராகவும், அவரை காதலிக்கும் இளம் பெண்ணாக பாரம்பரிய உடை அணிந்து நடிகை அதுல்யா தோன்றுவதும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. செகண்ட் லுக்கில் எக்சன் அவதாரத்துடன் ஹரிஷ் கல்யாண் தோன்றுவதால், அந்த தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right