கொலம்பியாவிலுள்ள சிறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது.
இந்த சிறையிலுள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தின்போது சிறையில் தீப்பற்றியது.
சிறையில் பரவிய தீ சிறிது நேரத்தில் சிறை முழுவதிலும் பரவியது.
இந்த தீயில் சிக்கி 51 கைதிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த தீக்காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM