நாட்டு மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடு : வாசு

Published By: Digital Desk 5

29 Jun, 2022 | 11:25 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும். ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் 21 ஆவது திருத்தம் உருவாக்கப்படவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன நிலையில், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூல வரைபு நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகவே காணப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது மட்டுப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்ட நிலையில் 21ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்பபடுத்தப்படவில்லை.முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டபய ராஜபஷவையும் அவர் தலைமையிலான அரசாங்கத்தையும் நாட்டு மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும் என்பதை கட்சியின் கொள்கை ரீதியில் தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாக பாதுகாக்கப்பட்டு எதிர்காலத்தில் மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு அதிகார ரீதியில் வரையறைகளை விதிப்பதில் 21ஆவது திருச்சட்டமூல வரைபில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடைமுறைக்கு சாத்தியமான எத்தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை.அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47