நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு

By Digital Desk 5

29 Jun, 2022 | 10:08 AM
image

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.

நுரையீரல் மற்றும் இருதயம் ஆகியன ஏற்கெனவே அவருக்கு செயலிழந்துவிட்ட நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல்போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். 

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்துள்ளமை திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right