இலங்கை அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி – வெளிநாட்டவர் ஒருவருக்கு தொடர்பு என சந்தேகம்

By Rajeeban

29 Jun, 2022 | 08:08 AM
image

இலங்கை அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போது ஆட்டநிர்ணயசதி முயற்சிகள் இடம்;பெற்றதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

விளையாட்டமைச்சின் விசேட பொலிஸ் விசாரணை பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது,இலங்கை அவுஸ்திரேலிய அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட்போட்டிக்கு முன்னதாக ஆட்டநிர்ணய சதி முயற்சிகள் இடம்பெற்றதா என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஜகத்பொன்சேக தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளிற்கான வழிகாட்டியொருவர் மூலம் எங்களிற்கு தகவல் கிடைத்தது,அவர் காலிமுகத்திடல் ஆடுகளத்தின் தன்மை குறித்த அறிக்கையை பெறுவதற்கு அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தினார் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவரை விசாரணை செய்தவேளை அயல்நாடொன்றை சேர்ந்த வெளிநாட்டவரின் செல்வாக்கிற்கு இவர் உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது டெஸ்ட்போட்டிக்கு முன்னர் இந்த நபர் இலங்கையை சேர்ந்தவரை பயன்படுத்தி ஆடுகளத்தின் தன்மையை அறிய முயன்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சுகதாசமைதானத்தை சேர்ந்த விசேட பொலிஸ் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையி;ல சுற்றுலாப்பயணிகளிற்கான வழிகாட்டியொருவரை ஏற்கனவே விசாரணை செய்துள்ள பொலிஸார் காலி கிரிக்கெட் மைதான முகாமையாளரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் இது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிற்கும் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right