எம்சிசி உடன்படிக்கையை நிராகரித்து 2 வருடங்களின் பின் அமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையை பெறுவதற்கான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

By Rajeeban

29 Jun, 2022 | 01:04 PM
image

அமெரிக்காவின் எம்சிசி உடன்படிக்கையின் கீழ் 480 மில்லியன் டொலர்களை பெறுவதை கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் நிராகரித்து இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்காவிடமிருந்து உதவித்தொகையொன்றை பெறும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இலங்கை அமெரிக்க அரசாங்கங்களிற்கு இடையிலான இரண்டு உடன்படிக்கைகள் மூலம் இலங்கைக்கு 37 மில்லியன் டொலர் கிடைக்கவுள்ளது.

ஜனநாயக நல்லாட்சி மற்றும் சமூக ஒருமைப்பாட்டிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் பேண்தகுமற்றும் மூடப்பட்டபொருளாதார வளர்ச்சியை உருவாக்குதல் ஆகிய இரண்டு நோக்கங்களை அடிப்படையாக கொண்ட திட்டங்கள் தொடர்பில் இரு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்துள்ள யோசனையில் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பின் மூலம்- யுஎஸ்எயிட் மூலம் 57 மில்லியன் டொலர்கள் நிதியளிப்பதற்கான வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு வரை 'பேரழிவுகளுக்கு மத்தியில் உயிர்வாழும் திறன் கொண்ட ஜனநாயக செழிப்பான இலங்கைக்கான நிகழ்ச்சித் திட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது உற்பத்தி ஜனநாயக ஆட்சி பாதுகாப்பான சந்தையை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி மற்றும் பலப்படுத்துதல் ஆகிய துறைகளில் போன்றவற்றில் இந்த திட்டம் கவனம் ஆரம்பக் கவனம் செலுத்துகிறது. 

2021 நவம்பரில் ஜனாதிபதி ராஜபக்ஷ அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவின் வருகைக்குப் பிறகு அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட mcc ஒப்பந்தத்தில் தனது அரசாங்கம் ஒருபோதும் கையெழுத்திடாது என்று கூறினார். இருப்பினும் ராஜபக்சேவின் அறிக்கைக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கைக்கான  mccசலுகையை அமெரிக்கா ரத்து செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right