இலங்கை மின்சார சபை 835 வீத கட்டண அதிகரிப்பை கோரியுள்ளது- ஏஎவ்பி

Published By: Rajeeban

28 Jun, 2022 | 09:20 PM
image

இலங்கை மின்சார சபை 835வீத மின்கட்டண அதிகரிப்பை கோரியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள எரிபொருள் இல்லாத இலங்கையின் மிகவும் நட்டத்தில் இயங்கும் அரசாங்க ஏகபோக நிறுவனமான இலங்கை மின்சார சபை அதிர்ச்சி தரும் 835 வீத கட்டண அதிகரிப்பை ஏழை நுகர்வோரிடமிருந்து கோரியுள்ளது என  மின்சார ஒழுங்குபடுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தென்னாசிய நாடு அந்நியசெலாவணி பற்றாக்குறை காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது,மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்திற்கான எரிபொருளை கூட இறக்குமதி செய்ய முடியாத அளவிற்கு டொலர் தட்டுப்பாடு காணப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை மின்சார சபை 65 பில்லியன் ரூபாய் நஸ்டத்தை சந்தித்துள்ளதுடன் அதிகளவு மானியத்தை பெறும் சிறிய மின்சார கொள்வனவாளர்களிடமிருந்து 835வீத கட்டண அதிகரிப்பை கோரியுள்ளது என இலங்கையின் பொதுப்பயன்பாட்டு  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது 30 கிலோவோட்ஸிற்கு பயன்படுத்துபவர்கள் மாதாந்த கட்டணமாக 54.ரூபாய் 27 சதத்தினை செலுத்துகின்றனர், இலங்கை மின்சார இதனை 507.65 சதமாக அதிகரிப்பதற்கான அனுமதியை கோரியுள்ளது என இலங்கையின் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான நுகர்வோரினால் இவ்வளவு பாரிய விலை அதிகரிப்பினை தாங்கிக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர் ஜானகரட்ணநாயக்க இதன் காரணமாக அவர்கள் கேட்டதை விட குறைவாக அதிகரிப்பதற்காக( அரைவாசிக்கும் குறைவாக)திறைசேரியிடமிருந்து நேரடி மானியத்தை பெறும் யோசனையை முன்வைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாவனை கட்டண அதிகரிப்பு குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை ஆனால் வர்த்தக மற்றும் கைததொழில்துறையினரின் மின்கட்டணங்கள் 43 முதல் 61 வீதத்தினால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33