“எமது ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி”, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பரிந்தரைக்கப்பட்டு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கட்சியின் சின்னமாக மலரும் மொட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.