எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண கட்டார் வலுச்சக்தி துறை அதிகாரிகளுடன் அமைச்சர் காஞ்சன முக்கிய பேச்சு

Published By: Vishnu

28 Jun, 2022 | 11:03 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டாரின் வலுசக்தி துறையின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டள்ள டுவிட்டர் செய்தியில், கட்டார் நாட்டின் வலுசக்தி விவகார இராஜாங்க அமைச்சரும் கட்டார் வலுசக்தி நிறுவத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சாட் ஷெரிடா அல்-காபியை  சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கைக்கு பெற்றோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயு (எல்.பி.ஜி) மற்றும் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) என்பவற்றை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார் வலுசக்தி அமைச்சு மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டுடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை கட்டாருக்கு விஜயம் செய்தார்.

அமைச்சர் கட்டார் விஜயத்திற்கு முன்னர் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவுடனும் நேற்று திங்கட்கிழமை விசேட சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார்.

குறித்த சந்திப்பில் , எரிபொருள் நெருக்கடி குறித்து கலந்துரையாடப்பட்டதோடு , அமெரிக்க அரசு மற்றும் ஏனைய அபிவிருத்தி நிறுவனங்களின் உதவியுடன் மின்சாரம் மற்றும் வலுசக்தி துறைகளை மேம்படுத்துவதற்கான நிலையான ஆற்றலைப் பெற்றுக் கொள்ளல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27
news-image

வாக்குச்சாவடிகளில் கலவரத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச்...

2024-09-07 17:11:24
news-image

இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற...

2024-09-07 16:30:57