பாக்கிஸ்தானின் அநீதிகளை வெளிப்படுத்துவதற்காக பலூச் குழு ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது

By Rajeeban

28 Jun, 2022 | 05:52 PM
image

பலூச்குரல் சங்கம் ஜூன் 20 அன்று ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் முன் உடைந்த நாற்காலி சிற்பத்துடன் இணைந்து ஒரு கண்காட்சி மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது பாக்கிஸ்தானால்முன்னெடுக்கப்படும் அட்டூழியத்தை குறிப்பாக பலவந்தமாக காணாமல்செய்யப்படுதலை இது எடுத்துக்காட்டுகிறது.

சீனாவால் முன்னெடுக்கப்படும்மற்றும் நிதியளிக்கப்பட்ட சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் அனைத்து எதிர்மறையான தாக்கங்களையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

ஜூன் 20 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு ஜூன் 22 ஆம் தேதி வரை .இடம்பெற்றது மனித உரிமை கவுன்சில் மற்றும் பல்வேறு தூதரக தூதரகங்களுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது

மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள பலூச் குரல் சங்கம் பலுசிஸ்தானில் ஆயிரக்கணக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்காட்சிகள் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது.

பலுசிஸ்தானின் மனித உரிமைகள் கவுன்சிலின் கூற்றுப்படி டிசம்பர் 2021 இல் 63 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர் மற்றும் காணாமல் போயுள்ளனர் மற்றும் 37 பேர் கொல்லப்பட்டனர்.

பாக்கிஸ்தான் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பான வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணை ஆணையத்தின்படி 8122 பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

சுதந்திரமான உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள்இந்த எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கின்றன. 20000 பேர் பலுசிஸ்தானில் இருந்து மட்டுமே கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது அவர்களில் 3000 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்த உடல்களாக தீவிர சித்திரவதையின் அடையாளங்களைக் கொண்டுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச்சபை பலவந்தமாக காணாமல்போகச்செய்தலை பாக்கிஸ்தான் ஒரு அரசாங்க சாதனமாக பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.சட்டவிரோத கடத்தல்கள் காணாமல்போனவர்களின் குடும்பத்தினர் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஆவணப்படுத்தப்பட்ட தொகுப்பொன்றை அது வெளியிடுகின்றது

பாக்கிஸ்தான் அரசாங்கம் பலவந்தமாக காணாமல்போகச்செய்தல் நீதிவிசாரணைக்கு புறம்பானபடுகொலைகளில் ஈடுபடுகின்றது என இந்த விடயம் தொடர்பில் பேசத்துணிந்த சர்வதேச அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாக குற்றம்சாட்டிவருகின்றன.

கடத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மாகாண தலைநகர் குவெட்டாவில் தங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாப்பாக மீட்க நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மேலும் அவர்களின் போராட்ட முகாம் தற்போது 4608 நாட்களுக்கும் மேலாகநீடிக்கின்றது நிறைவடைந்துள்ளது. ani

முக்கிய செய்திகள்

icon-left
icon-right