காலி மைதானத்திற்கு முன் அணிவகுத்திருந்த எரிவாயு சிலிண்டர்கள் : லாஃப் விநியோகம் - லிட்ரோ சிலிண்டர்கள் வரிசையில்

By T Yuwaraj

28 Jun, 2022 | 05:37 PM
image

காலி கிரிக்கெட் மைதானத்திற்கு முன்பாக கடந்த ஒரு வாரமாக சிலிண்டர்களுக்காகக் காத்திருந்த மக்களுக்கு  லாஃப் எரிவாயு நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

இந்நிலையில், நாளை (29) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காலி கிரிக்கெட் மைதானத்திற்கு சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் காலி எரிவாயு சிலிண்டர்களை வரிசையாக வைத்து சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள காத்திருந்தனர்.

இதையடுத்தே லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த மக்கள்  சுமார் ஒரு மாதமாக வரிசையில் காத்திருந்த போதிலும், லிட்ரோ எரிவாயு இதுவரை எரிவாயு சிலிண்டர்களை வழங்கவில்லை, எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியின் போது காலி லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே வரிசையாக வைக்கப்படும் எனவும் எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right