பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் நாட்டின் நிலைகுறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எடுத்துரைப்பு

Published By: Vishnu

28 Jun, 2022 | 10:39 PM
image

(நா.தனுஜா)

பொதுநலவாய அரசதலைவர்கள் மாநாட்டைத் தொடர்ந்து அங்கு பல்வேறு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்பீரிஸ், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும், அதிலிருந்து மீள்வதற்கு அவசியமான சர்வதேச ஒத்துழைப்பு குறித்தும் அவர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

ருவாண்டாவில் கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற பொதுநலவாய அரசதலைவர்கள் மாநாட்டின் பக்க நிகழ்வாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் குழுவின் தலைவர்களைச் சந்தித்ததுடன் தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, இந்நெருக்கடியிலிருந்து மீட்சியடைதல் மற்றும் பல்தரப்புக்கட்டமைப்புக்களின் ஊடாக ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல் ஆகிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்படி வெளிவிவகார, சர்வதேச வர்த்தக மற்றும் புலம்பெயர் மக்களுடனான நல்லுறவு தொடர்பான அமைச்சர் டொமினிகா கெனெத் மெல்கொய்ர் டரொக்ஸுடனான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் அவசியமானதாகக் காணப்படும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்தோடு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதில் இருநாடுகளும் முகங்கொடுத்த அனுபவங்கள் குறித்தும் இதன்போது பகிரப்பட்டது.

சீஷெல்ஸ் நாட்டில் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சில்வெஸ்டர் ரடெகொன்ட்டுனான சந்திப்பில் கடல்சார் ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டது.

மேலும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதன் மூலமும், கடனுதவிகள் மூலமும் உதவுவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பங்களாதேஷ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமென் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு விளக்கமளித்தார்.

அதேபோன்று கென்யாவின் வெளிவிவகார அமைச்சரவை செயலாளர் ரேச்சல் ஒமாமோ, மொரீசியஸ் நாட்டின் வெளிவிவகார, பிராந்தியத்தொடர்புகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் அலன் கானோ, சைப்ரஸ் வெளிவிவகார அமைச்சர் லோனிஸ் கஸோலிடைஸ், மலேசிய வெளிளவகார அமைசச்ர் சைஃபுதீன் அப்துல்லா, ருவாண்டாவின் வெளிளிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சர் வின்சென்ற் பிருடா ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாட்டின் தற்போதைய நிலைவரம், நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58