சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்

By T. Saranya

28 Jun, 2022 | 04:48 PM
image

சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் நாளை (29) மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை (30) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

துணை சுகாதார தொழிற்சங்கத்தின் எட்டு தொழிற்சங்கங்கள் மேற்படி இரண்டு நாட்களில் பணிக்கு சமூகமளிக்காது தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளன.

பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI), குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொற்று நோயியல் வல்லுநர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் ஒரு பகுதியாக உள்ளனர்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பிலேயே சுகாதாரத் துணை சுகாதார தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right