உயர் நீதிமன்றில் அவசர வழக்குகளை மாத்திரம் விசாரிக்க தீர்மானம்

By T. Saranya

28 Jun, 2022 | 05:04 PM
image

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஜூன் 28 முதல் ஜூலை முதலாம் திகதி வரை திறந்த நீதிமன்றத்தில் 'அவசர' வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட விண்ணப்பங்கள்/மேல்முறையீடுகளில் ஏதேனும் அவசர வழக்குகள் இருந்தால், அவை திறந்த நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றால், அந்தத் தீர்மானத்தின் அறிவிப்பை எதிர் தரப்பு/கட்சிகளின் பதிவு செய்யப்பட்ட  வழக்கறிஞரிடம் கொடுத்து, அதற்கான விண்ணப்பம் அடங்கிய ஒரு பிரேரணையை திட்டமிட்ட திகதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

அவசர வழக்குகள் தொடர்பான மனுக்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய விரும்புவோர், குறிப்பிட்ட திகதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் பிரேரணையை அனுப்ப வேண்டும் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right