(நா.தனுஜா)
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட், ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் பப்லிக் கம்பனி மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் ஆகிய 5 முறிவடைந்த நிதிக்கம்பனிகளின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடிவிற்குக்கொண்டுவருவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது சென்றல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட், ரி.கே.எஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் பப்லிக் கம்பனி மற்றும் த ஸ்ராண்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் ஆகிய 5 முறிவடைந்த நிதிக்கம்பனிகளுக்குப் புத்துயிரளித்து அவற்றை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைக்குழுவொன்றை ஸ்தாபித்திருந்தது.
அதன்படி அக்கம்பனிகளை மீளவலுப்படுத்துவதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைத்தல் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியமில்லாதபோது அக்கம்பனிகளின் செயற்பாடுகளை நிரந்தரமாக முடிவிற்குக்கொண்டுவருவதற்குப் பரிந்துரைத்தல் ஆகிய பொறுப்புக்கள் நாணயச்சபையினால் அக்குழுவிடம் வழங்கப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிடப்பட்டவற்றில் 4 கம்பனிகளுக்குப் புத்துயிரளிப்பதற்காக வேறுபட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலித்ததன் பின்னர் அந்தக்குழு கடந்த மாதம் 31 ஆம் திகதி அதன் இறுதி அறிக்கையை நாணயச்சபையிடம் சமர்ப்பித்தது.
அவ்வறிக்கையைப் பரிசீலித்த நாணயச்சபை, அக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடையவல்ல என்றும், அப்பரிந்துரைகள் பலதரப்பட்ட கொள்கை மற்றும் சட்டரீதியான கடப்பாடுகளைக் கொண்டிருப்பதால் தற்போதைய கட்டமைப்பின்கீழ் அவற்றை நடைமுறைப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் தீர்மானித்துள்ளது.
ஆகவே முறிவடைந்த இந்த 5 கம்பனிகளினதும் செயற்பாடுகளை நிரந்தரமாக முடிவிற்குக்கொண்டுவருவது மாத்திரமே ஒரேயொரு தீர்வாக இருப்பதால், அதனை உரிய சட்ட வரையறைகளுக்கு அமைவாகச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM