ஜனாதிபதி இல்லத்துக்கு அருகில் ஹிருணிகா பயணிக்க தடை

By Digital Desk 5

28 Jun, 2022 | 04:25 PM
image

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பயணிப்பதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஊடகத்தில் ஒரு காணொளி வெளியாகியுள்ளது.  

அதில், தனது இரண்டு நண்பர்களுடன் குறித்த வீதியில் அமைந்துள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்கு அந்தப் பகுதிக்கு வந்தேன்.

எவ்வாறாயினும், பொலிஸார் உடனடியாக தடுப்பு வேலிகளை வைத்து, பொது மக்களுக்கு வீதியை திறந்திருந்த போதும், தன்னை வீதிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right