நுவரெலியாவில் எரிபொருளுக்கு ‘டோக்கன்’ விநியோகம் ஆரம்பம்

By Vishnu

28 Jun, 2022 | 02:36 PM
image

செ.திவாகரன்

நாடளாவிய ரீதியில் கடந்த 27 ஆம் திகதி முதல் ‘டோக்கன்’ முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

நுவரெலியா பிரதான நகரில் நகரிலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெறுவதற்காக வருகை தந்தவர்களுக்கு இராணுவத்தினரால் பதிவு செய்யப்பட்டடு எரிபொருளுக்கான ‘ டோக்கன்’ வழங்கி  வருகின்றன.

நீண்ட நாட்களுக்கு பிறகு 28 ஆம் திகதி இன்றைய தினம் நுவரெலியா லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையத்திற்கு 6,600 லீற்றர் பெட்ரோல் வருகை தந்தபோது நுவரெலியா பிரதேச செயலாளர் வீதுன சம்பத் தலையீட்டின் மூலம் அனைத்தும் வாகனங்களுக்கும் பெட்ரோல் வழங்கும் நோக்கில் மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாய்க்கும், முச்சக்கர வண்டிகளுக்கு 3,000 ரூபாய்க்கும் ஏனைய வாகனங்களுக்கு 8,000 ரூபாய்க்கு வழங்குவதற்கும்  600 லீற்றரினை மாத்திரம் அத்தியாவசிய தேவைக்காக வழங்க தீர்மானம் செய்து அமைதியான முறையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

எரிபொருள் வரிசையை குறைப்பதற்காக இராணுவத்தின் உதவியுடன் இன்று முதல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தி , வாகன இலக்கங்களையும் பதிவு செய்து வருகின்றன இதற்கென பாதுகாப்பு நடவடிக்கைக்காக பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right