ஹொங்கொங் பிரிட்டிஷ் காலனியாக இருந்ததில்லை - புதிய பாடசாலை புத்தகங்கள் கூறுவதாக அறிக்கை

By Vishnu

28 Jun, 2022 | 12:51 PM
image

ஹொங்கொங்கில் உள்ள  பாடசாலை புதிய பாடப்புத்தகங்களில் 'பிரிட்டிஷ் காலனியாக ஹொங்கொங்  இருந்தததில்லை என குறிப்பிடப்பட்டுள்ளமையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பாடசாலை மாணவர்களுக்கு ஹொங்கொங் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பேரரசின் காலனியாக இருந்தது என்று நீண்ட காலமாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் தற்போது ஹொங்கொங்கில் உள்ள மாணவர்களுக்கு அவ்வாறு இல்லை என  குறிப்பிடப்படுகின்றது.

1997 இல் பிரிட்டிஷ் ஹொங்கொங்கை ஒப்படைத்தது. ஜூலை 1, 1997 அன்று சீனா கட்டுப்படுத்த தொடங்கியது. 

ஆனால் வரலாற்றை நான்கு புதிய பாடப்புத்தகங்கள் மூலம் ஹொங்கொங் உயர்நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு தவறாக கற்பிக்க முற்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பாடநூல் உள்ளடக்கமானது ஹொங்கொங்கின் கல்விப் பணியகத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் பணியாளர்களால் இன்னும் மதிப்பாய்வில் உள்ளது.

1972 ஆம் ஆண்டில், பெய்ஜிங் உலக அமைப்பில் சீனாவின் இடத்தைப் பெற்ற பிறகு, ஹொங்கொங்கின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது சீனாவின் இறையாண்மைக்கு உட்பட்டது என்று வாதிட்டு, ஹொங்கொங்கை பட்டியலில் இருந்து நீக்க ஐ.நா.வை வெற்றிகரமாகத் தள்ளியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right