எரிபொருளை இறக்குமதி செய்து விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிற்கு அமைச்சரவை அனுமதி

Published By: Rajeeban

28 Jun, 2022 | 11:56 AM
image

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் இறக்குமதி விற்பனை சந்தைகளை வெளிநாட்டு நிறுவனங்களிற்கு திறந்துவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

அமைச்சர் காஞ்சனவிஜயசேகர இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திறன் மற்றும் ஆரம்பகாலத்தில் மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளிடமிருந்து டொலரை பெறாமல் இயங்ககூடிய திறன் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வெளிநாட்டு நிறுவனங்களை தெரிவு செய்ய உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிறுவனங்களிற்கு அவசியமான களஞ்சிய விநியோக சேவை போன்றவற்றை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கும் என டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமைச்சர் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09