பசறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் பொலிஸாரினால் மீட்பு

By Vishnu

28 Jun, 2022 | 12:41 PM
image

எம்.செல்வராஜா 

எரிபொருளை பதுக்கி வைத்திருந்த நபரொருவரை, பசறைப் பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளதோடு,  பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருளையும் மீட்டுள்ளனர்.

பசறைப்பகுதியின் டெமேரியா பெருந்தோட்டப்பிரிவைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவராவார்.

பசறைப்  பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலொன்றினையடுத்து, குறிப்பிட்ட பெருந்தோட்டப்பிரிவிற்கு விரைந்த பொலிஸார், அத்தோட்டப்பிரிவை சுற்றிவளைத்து, தேடுதல்களை  மேற்கொண்டபோதே, பதுக்கிவைக்கப்பட்ட  எரிபொருள் மீட்கப்பட்டது.  அதனை பதுக்கிவைத்தவரும் கைது செய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட நபர், பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய  நவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

மூன்று கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டிருப்பதாகவும், அதில்  நூறு லீற்றர் டீசல் இருக்கலாமென்று,  பொலிஸார்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right