பழம்பெரும் நடிகர் பூ ராமு காலமானார்

By T. Saranya

28 Jun, 2022 | 11:06 AM
image

நடிகரும், நாடக கலைஞருமான பூ ராமு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 

இயக்குநர் சசி இயக்கிய பூ படத்தில் அறிமுகமாகி பாராட்டை பெற்ற நடிகர் ராமு, நீர்ப்பறவைகள், தங்க மீன்கள், வீரம், ஜில்லா, நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப் போற்று என பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.

நடிகர் ராமு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், திரை பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right