ஜோர்தானில் இரசாயான வாயு கசிவு ; 11 பேர் பலி

By T. Saranya

28 Jun, 2022 | 10:57 AM
image

ஜோர்தானின் அகாபா துறைமுகத்தில்  குளோரின் இராசாயன வாயு  கசிந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு,  250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கு 25 தொன் குளோரின் வாயு நிரப்பப்பட்ட கொள்கலன்களை கொண்டு செல்லும்போது கீழே விழுந்ததில் கசிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 199 பேர் இரசாயன பாதிப்புக்குள்ளாகி  வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குளோரின் என்பது தொழில்துறை மற்றும் வீட்டு சுத்தம் செய்யும் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும். 

இது சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையதாகும். ஆனால் பொதுவாக சேமிப்பு மற்றும் ஏற்றுமதிக்காக அழுத்தப்பட்டு குளிர்விக்கப்படுகிறது.

குளோரின் உடலில் உள்ளிழுக்கப்படும்போது, விழுங்கும்போது அல்லது தோலுடன் தொடர்பு கொள்ளும்போது, அது தண்ணீருடன் வினைபுரிந்து உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும் அமிலங்களை உருவாக்குகிறது. 

அதிக அளவு குளோரின் உள்ளிழுப்பது நுரையீரலில் திரவத்தை உருவாக்குகிறது. நுரையீரல் வீக்கம் எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right