சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் கைது

By Digital Desk 5

28 Jun, 2022 | 09:55 AM
image

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செயல் முயன்றுள்ள நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மட்டக்களப்பு - பாலமீன்மடு பிரதேசத்தில் வைத்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 54 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right