மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்து விபத்து ; 12 பேர் மீட்பு

By T. Saranya

28 Jun, 2022 | 09:11 AM
image

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் மும்பையின் குர்லா நகரில் நேற்று (27) இரவு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

அதில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right