இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில்

By T Yuwaraj

27 Jun, 2022 | 08:16 PM
image

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022-23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.

Articles Tagged Under: High Commission of India | Virakesari.lk

இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது.

இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு, வருடாந்த உதவித்தொகை மற்றும் சுகாதார நலன்புரி சேவைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk.  இணையதளத்தில் காணமுடியும்.  இதற்கான விண்ணப்பங்களை ICCR A2A தளம் ஊடாக (www.a2ascholarships.iccr.gov.in ) பதிவேற்றம் செய்வதற்கான இறுதி திகதியான 2022 ஜூலை 15ற்கு  முன்னதாக அனுப்பிவைக்கவும். மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளலாம் 

(E-mail- eduwing.colombo@mea.gov.in /0112421605, 0112422788 ext-605). 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை...

2022-10-07 12:10:56
news-image

சர்ச்சைக்குரிய இந்திய நிறுவன மருந்துகள் இலங்கையில்...

2022-10-07 12:10:55
news-image

அவசியமான விடயங்களை இலங்கை செய்வதற்காக காத்திருக்கின்றோம்...

2022-10-07 11:55:23
news-image

வீடொன்றிலிருந்து 6 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்...

2022-10-07 12:15:36
news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 12:12:33
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12