எரிபொருள் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக கட்டார் சென்ற அமைச்சர்கள்

Published By: Vishnu

27 Jun, 2022 | 07:42 PM
image

(எம்.மனோசித்ரா)

வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடத்துறை அமைச்சர் நசீர் அஹம்மட் ஆகியோர் எரிபொருள் நெருக்கடிக்கான தீர்வு காண்பதற்கான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக கட்டாருக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

நாடு எதிர்கொண்டுள்ள டொலர் நெருக்கடியானது எரிபொருள் இறக்குமதியில் பாரிய தாக்கத்தினை செலுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடானது நாட்டின் சகல துறைகளையும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் எரிபொருள் இறக்குமதிக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடந்த இரண்டரை மாதங்களாக கடன் திட்டத்தின் கீழ் இந்தியாவிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்ளப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் இந்திய கடனுதவி திட்டம் நிறைவடைந்ததையடுத்து , எரிபொருள் இறக்குமதி விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இம்மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்கள் இரண்டு நாட்டை வந்தடையவுள்ளதாக வலு சக்தி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட போதிலும் , பின்னர் குறித்த கப்பல்கள் வரும் தினத்தை உறுதியாகக் கூற முடியாது என்று அறிவிக்கப்பட்டது.  

தற்போது கையிருப்பிலுள்ள மிகக் குறைந்தளவிலான எரிபொருள் தொகை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டளவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளுடன் கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கட்டார் ஜனாதிபதியிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே இலங்கை தூதுக்குழுவொன்று கட்டாருக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதற்கமையவே நேற்றைய தினம் வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடற்துறை அமைச்சர் நசீர் அஹம்மட் ஆகியோர் கட்டாருக்கு பயணமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37