ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சின்ட்ரோம் என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 5

27 Jun, 2022 | 04:22 PM
image

எம்மில் பலரும் இரவு நேரத்தில் உறங்கும் போது தங்களையும் அறியாமல் இரண்டு கால்களில் ஏதேனும் ஒரு காலை லேசாக அசைப்பார்கள். 

சிலர் குறைவான நேரத்திற்கும், சிலர் கூடிய கால அவகாசத்திற்கும் காலை அசைத்துக் கொண்டிருப்பர்.

 இந்த நிலைக்கு ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சின்ட்ரோம் என்று மருத்துவ மொழியில் பெயரிடப்பட்டிருக்கிறது. 

சிலர் இதனை வில்லிஸ்-எக்போம் நோய் பாதிப்பு என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் உறக்கத்தை தடுத்து, உறக்கமின்மை பாதிப்பை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக எம்முடைய நாளாந்த நடவடிக்கைகளிலும் இதன் பாதிப்பு ஏற்படக்கூடும்.

இந்தகைய பாதிப்பு பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் ஏற்படுகிறது. இளைய தலைமுறையினரை விட வயதில் மூத்தவர்களை இத்தகைய பாதிப்பு எளிதாக தாக்குகிறது. 

எம்முடைய மூளையில் உறக்க தருணத்தில் சுரக்கும் டோபமைன் எனும் ஹோர்மோன் சுரப்பில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். 

மேலும் சிலருக்கு மரபணு மாற்ற குறைபாட்டின் காரணமாகவும், இரும்பு சத்து குறைபாட்டின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இரும்பு சத்து குறைபாட்டிற்கான பரிசோதனை மற்றும் சிறுநீரக செயல்திறன் குறித்த பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள பரிந்துரைப்பர்.‌ 

இதனை குறைப்பதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இதனுடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை பயிற்சியையும் தொடர்ச்சியாக மேற்கொண்டால் முழுமையான நிவாரணத்தை பெறலாம்.

டொக்டர் கார்த்திகேயன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49