சுந்தர் சியின் ' தலைநகரம் 2' படத்தின் படபிடிப்பு நிறைவு

By Digital Desk 5

27 Jun, 2022 | 04:12 PM
image

இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தலைநகரம் 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் வி. இசட். துரை இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'தலைநகரம் 2' இந்த திரைப்படத்தில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை அயிரா, நடிகர் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

'தலைநகரம்' படத்தின் முதல் பாகத்தில் சுந்தர் சி நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி, புதிய கதைக்களத்துடன் 'தலைநகரம் 2' உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ரெட் ஐ தியேட்டர்ஸ் என்ற பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right