( எம்.எப்.எம்.பஸீர்)
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கீர்த்தி ரத்ன உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணையளிக்க சட்ட மா அதிபர் ஆட்சேபனை வெளியிட்டுள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றில் இது குறித்த அறிவிப்பை சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார வெளியிட்டார்.
குறித்த துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும், அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் வாசனா நவரட்ன விடுத்த உத்தரவை ரத்து செய்து ' ரிட் ' ஆணை ஒன்றினை ( எழுத்தாணை) பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று ( 27) பரிசீலிக்கப்ப்ட்ட போது பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார இதனை அறிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விலக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் இந்த ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இம்மனு தொடர்பில் இன்று 27 ஆம் திகதி மன்றில் விளக்கமளிக்குமாறு, மேன் முறையீட்டு நீதிமன்றம் கடந்த 02 ஆம் திகதி மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் சி.ஐ.டி.யின் பணிப்பளருக்கு உத்தரவிட்டது.
அதன்படி மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், குறித்த ரிட் மனு இன்று பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது மனுதாரர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோவும், பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டாரவும் மன்றில் ஆஜராகினர்.
இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்ணான்டோ, தமது சேவை பெறுநர்களுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் ஆட்சேபனை இல்லை என அறிவிப்பாரானால், வழக்கினை முன் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனக பண்டார, மனுதாரர்களுக்கு பிணையளிக்க சட்ட மா அதிபர் ஆட்சேபனம் வெளியிடுவதாக தெரிவித்தார்.
அதன்படி இந்த மனுவை தொடர்ந்து பரிசீலனைக்கு எடுக்க தீர்மானித்த நீதிமன்றம், மேலதிக பரிசீலனைகளை மீள நாளைமறுதிளம் 29 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM