தோடம்பழ விதை தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தையொன்று மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த குழந்தை வீட்டில் விளையாடிகொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்படவே நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவர்களால் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தொண்டையில் தோடம்பழ விதை சிக்குண்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளது.

இதேவேளை, குழந்தைகளை கீழே விளையாடவிடும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.