உலக டென்னிஸ் அரங்கில் அதி உன்னதம் வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 5

27 Jun, 2022 | 03:47 PM
image

(என்.வீ.ஏ.)

உலக டென்னிஸ் அரங்கில் வருடாந்தம் நடத்தப்படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் அதி உன்னதம் வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் க்ளப் அரங்குகளில் இலங்கை நேரப்படி இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

No description available.

தூய்மையின் அடையாளமாக வெண்ணிற ஆடைகளுடன் விளையாடப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பங்குற்றுபவர்கள் கணவான்கள் எனவும் சிமாட்டிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டி வரலாற்றில் தனி ஒரு போட்டியில் 4 தடவைகள் தொடர்ச்சியாக சம்பயினாகும் முயற்சியுடன் சேர்பிய வீரர் நொவாக் ஜோகோவிச் இம்முறை போட்டியிடுகிறார்.

பிஜோன் போர்க், பீட் சம்ப்ராஸ், ரொஜர் பெடரர், ரபாயல் நடால் ஆகியோர் தனி ஒரு மாபெரும் போட்டியில் தொடர்ச்சியாக 4 வருடங்கள் வெற்றிபெற்று வரலாற்றுச் சாதனை நிலைநாட்டியுள்ளனர். இந்த வருடம் விம்பிள்டனில் ஜொகோவிச் சம்பியனானால் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் ஒரே போட்டியில் சம்பயினானவர் என்ற பெருமையையை பெறுவார். அவர் கடந்த 3  விம்பிள்டன்  சம்பியன்ஷிப்களில் (2018, 2019, 2021) தொடர்ச்சியாக சம்பியனானார். 2020இல் கொரோனா தொற்று காரணமாக போட்டி நடத்தப்படவில்லை.

கடந்த வருடம் சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவில் முதல் தடவையாக சம்பியனான அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி பார்ட்டி, திடீர் ஓய்வை அறிவித்ததால் இம்முறை விளையாடவில்லை.

இதேவேளை, இம்முறை வைல்ட் கார்ட் முறையில் பங்குபற்றும் செரினா வில்லியம்ஸ் 25ஆவது க்ராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளார்.

மார்க்ரட் கோர்ட்டின் 25 க்ராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை சமப்படுத்துவதற்கு கடந்த 5 வருடங்களாக செரினா வில்லிம்ஸ் முயற்சித்து வருகின்றார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டாமல் போயுள்ளது. எவ்வாறாயினும் இந்த வருடம் அதற்கான முயற்சியில் செரினா வில்லியம்ஸ் மீண்டும் இறங்கவுள்ளார்.

இந்த இரண்டு பாலாரிலும் சம்பியன் பட்டங்களை சூடுபவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களுடன் தலா 2 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்கள் (இலங்கை நாணயப்படி 88 கோடி ரூபா) பணப்பரிசு வழங்கப்படும்.

இது இவ்வாறிருக்க, யுக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுத்தற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் விம்பிள்டனில் இம்முறை ரஷ்யா மற்றும் பெலாரஷ்யா வீர, வீராங்கனைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் சங்கம் இந்தத் தடையை விதித்துள்ளது.

கணவான்கள் ஒற்றையர் பிரிவு நிரல்படுத்தல்

விம்பிள்டனில் இம்முறை கணவான்கள் ஒற்றையர் பிரிவு நிரல்படுத்தலில் நொவாக்  ஜோகோவிச், ரபாயல் நடால், கெஸ்பர் ரூட், ஸ்டெபானஸ் சிட்சிபாஸ், கார்லோஸ் அல்காரஸ், பீலிக்ஸ் ஒவ்கர் அலியாசிம், ஹியூபர்ட் ஹேர்க்காஸ், மெட்டீயோ பெரெட்லினி, ஜனிக் சின்னர் ஆகியோர் முதல் பத்து இடங்களில் இடம்பெறுகின்றனர்.

சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவு நிரல்படுத்தல்

சீமாட்டிகள் ஒற்றையர் பிரிவு நிரல்படுத்தலில் இகா ஸ்வியாடெக், அனட் கொன்டாவெய்ட், ஒன்ஸ் ஜெபோர், பாவ்லா படோசா, மரியா சக்காரி, கரோலினா ப்ளிஸ்கோவா, டெனில் கொலின்ஸ், ஜெசிக்கா பெக்யூலா, கார்பின் முகுருஸா, எம்மா ரடுகானு ஆகியோர் முதல் பத்து இடங்களில் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35