எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் RDB வங்கி....

By Digital Desk 5

27 Jun, 2022 | 03:17 PM
image

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை தடுப்பதற்கான விசேட செயற்பாடுகள் பலவற்றை பிரதேச அபிவிருத்தி வங்கியானது முன்னிறுத்தியுள்ளது.

அவற்றுள், பிரதானமாக பெண் முயற்சியாண்மையாளர்களை ஊக்குவித்தல் நடவடிக்கையை குறிப்பிடலாம்.

அதாவது மீள் மூலதனமிடல், வட்டி சலுகைகள் மற்றும் ஏனைய கடன் திட்டங்களை பெற்றுக்கொடுப்பதனால் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்க முடிவதோடு அதன் மூலம் குடும்ப பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும்.

முக்கியமாக இதன் ஊடாக தேசிய உற்பத்தி விகிதமும் உயர்வடையும் சாத்தியமுண்டு என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கேற்ப விவசாயம், கால்நடை நிர்வாகம், பால் உற்பத்தி, சிறிய கைத்தொழில் மற்றும் பெறுமதிசார் கைத்தொழில்களில் ஈடுபடும் முயற்சியாண்மையாளர்களுக்கு 10 வருட அடிப்படையில் செலுத்துவதற்கு 8.8 வீத வருடாந்த வட்டியிலான நிதி வசதிகளை வழங்குவதற்காக சுனுடீ வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன்  RDB வங்கியினால் செயற்படுத்தப்படும் மேலும் ஒரு விசேட நிதி வசதியே 'சௌபாக்யா" கடன் திட்டம்.

இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து வழங்கப்படும் இந்நிதி வசதியானது 9 வீத குறைந்தளவு வட்டியின் கீழ் நுண், சிறிய மற்றும் நடுத்தர பரிமாண முயற்சியாண்மை நடவடிக்கைகள் மற்றும் விவசாயம், கால்நடை நிர்வாகம், மீன்பிடி தொழில் போன்ற பிரிவுகளுக்கும் வழங்கப்படும்.

மீள செலுத்தப்படும் கால வரையறையாக 06 ஆண்டுகளும் சலுகை காலமாக 06 மாதங்களும் பெரும்போகத்திற்கான சலுகைக்காலம் 12 மாதங்களாகவும் பெற்றுக்கொடுக்கப்படும்.

25 மில்லியன் ரூபா வரையில் கடனாக வழங்கப்படும் இந்நிதி வசதியானது இதன்பொழுதும் பெருமளவு முயற்சியாண்மையாளர்களுக்கு உரித்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து கிராம சேவக பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொருவரை உள்ளடக்கும் வகையில் புதிய பெண் முயற்சியாண்மையாளர்கள் 15000 பேரை அடையாளங்கண்டு அவர்களுக்கு நிதி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கல், சிறந்த வழிக்காட்டல்களுடன் சந்தை பற்றிய அறிவை பெற்றுக்கொடுத்தல் என்பனவும் இங்கு மேற்கொள்ளப்படும்.

விசேடமாக இறக்குமதிசார் கைத்தொழில்கள் மற்றும் வெளிநாட்டு நாணய விகிதத்தை ஈட்டக்கூடிய கைத்தொழில்களுக்கு இதன் கீழ் முன்னுரிமையளிக்கப்படுகின்றன.

அதற்கேற்ப கைத்தொழில் அபிவிருத்திச் சபை, சிறிய வியாபார அபிவிருத்தி பிரிவு, தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி அதிகாரச்சபை போன்ற நிறுவகங்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் ஒழுங்கமைக்கப்படும் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் சூழலுக்கு ஒத்திசைவான மற்றும் மாதாந்தம் 500,000 ரூபாவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய, பிரதான ஏற்றுமதிசார் கைத்தொழில்களை தெரிவு செய்து அதற்குரிய நிதி வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் செயன்முறை இத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் குறுங்கால அல்லது நீண்டகாலம் பொருளாதாரத்தை நடாத்திச் செல்வதற்கு முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெற்றிகரமான முயற்சியாண்மையாளராவதற்கு பிரதானமாக 02 பிரிவுகளை தொடரலாம். அதாவது தன்னியக்க நிதி ஒழுக்கங்களை நடாத்திச் செல்லல் மற்றும் தாம் தயாரிக்கும் பொருட்களை உயர்தரத்தில் முன்வைத்தல்.

பயிற்றுவிப்பின் போது இப்பிரிவுகளை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

பெண் முயற்சியாண்மையாளர்களை பலப்படுத்தும  சுனுடீ திரி அபிமானி 2022 நிகழ்ச்சியின் சிறந்த பெண் முயற்சியாண்மையாளராக தெரிவு செய்யப்பட்டவர்களை படங்களில் காணலாம். சிறிய மற்றும் நடுத்தர பரிமாண பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றவர் நுண்நிதி பரிமாண பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றவர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right