விவசாய செய்கையை மேம்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் மர நடுகை

By Vishnu

27 Jun, 2022 | 03:35 PM
image

அரசாங்கத்தின் விவசாய செய்கையை மேம்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் சகல அரச பாடசாலைகளிலும் இடவசதிக்கு ஏற்ப வீட்டுத்தோட்டச் செய்யைகை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைய இன்று  கொழும்பு 12 வாழைத்தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியிலும் பாடசாலை அதிபர் எம்.எம்.மஹ்சூர் தலைமையில் மரநாட்டும் இன்று 27 ஆம் திகதி திங்கட்கிழமை நிகழ்வு இடம் பெற்றது.

பயன் தரும் மரங்களை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களும் இணைந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர். பாடசாலைக்கு மரக்கன்றுகளை மேமன் சங்கத்தினர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right