(இராஜதுரை ஹஷான்)
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து கட்டண திருத்தம் தொடர்பிலான இறுதி தீர்மானம் செவ்வாய்கிழமை (28) அறிவிக்கப்படும்.
எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேரூந்து கட்டணத்தை அதிகரிக்காமல்,தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருன்டா தெரிவித்தார்.
பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
பேருந்து கட்டண திருத்தம் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாம் திகதி திருத்தம் செய்யப்படும்.
12 யோசனைகளுக்கமைய பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் பேருந்து கட்டணம் நான்கு முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் விலையேற்றம ஆகிய காரணிகளை கொண்டு பேருந்து கட்டணம் மீண்டும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் இன்று தீர்க்கமான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதை தொடர்ந்து இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும்.
எரிபொருள் விலையேற்றத்தினை கருத்திற் கொண்டு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமாயின் அதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
தற்போதைய நிலையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்காமல் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு குறுகிய காலத்திற்கு எரிபொருளை நிவாரண அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை பரிசீலனை செய்யப்படும் என்றார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM