குத்துச்சண்டை சங்கத்தின் உரிமைகளை பறித்தது சர்வதேச ஒலிம்பிக் குழு

Published By: Digital Desk 5

27 Jun, 2022 | 02:57 PM
image

(என்.வீ.ஏ.)

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குத்துச்சண்டை போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) உரிமைகளை சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) பறித்துள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் நிர்வாகத்தில் நிலவும் குளறுபடிகள் காரணமாகவே அதன் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விழாவுக்கான தகுதிகாண் போட்டிகளும் இதில் அடங்குகின்றது. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதால் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குத்துச் சண்டை போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் குழு ஏற்பாடு செய்யவுள்ளது.

ஐபிஏ தலைவர் பதிவிக்கு வரக்கூடியவர் என நம்பப்பட்ட பொரிஸ் வென் டேர் வோர்ஸ்ட் தகுதியற்றவராக கருத்தப்பட்ட பின்னர் அவர் நிலைநிறுத்தபட்டிருக்க வேண்டும் என விளையாட்டுத்துறைக்கான நியாயாதிக்க சபை கடைசிக் கட்டத்தில் கண்டறிந்தது என சர்வதேச ஒலிம்பிக் குழு விளையாட்டுத்துறை இயக்குநர் கிட் மெக்கொனல் தெரிவித்தார்.

'எல்லாம் இத்தோடு போதும் என உணர்ந்த சர்வதேச ஒலிம்பிக் குழு, விளையாட்டு வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை சமூகத்தன் நலன் கருதி குத்துச்சண்டை தகுதிகாண் போட்டிகளையும் போட்டி நிகழ்ச்சிகளையும் ஐபிஏயின் அதிகாரத்தின் கீழ் நடத்தாதிருக்க தீர்மானித்தது' என மெக்கொனெல் தெரிவித்தார்.

'விளையாட்டு வீரர்களுக்கு உறுதி அளிப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் குழு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சர்வதேச குத்துச்சண்டை சங்கம், 'இந்தத் தீர்மானம் குறித்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது' என தெரிவித்தது.

தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மிகவும் கவனமாக பரிசீலிப்பதற்கு சில காலம் எடுக்கும் என சங்கம் குறிப்பிட்டது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் நிதி நிலவரம், மத்தியஸ்தம், தீர்ப்பு முறை, ஆளுமை ஆகிய விடயங்களில் இடம்பெற்றுள்ள குறைபாடுகளை காரணம் காட்டியே சர்வதேச ஒலிம்பிக் குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35