சம்மாந்துறையில் டீசல் ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

Published By: Digital Desk 4

27 Jun, 2022 | 01:27 PM
image

சம்மாந்துறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் படி ரக வாகனமொன்றில் 18 கேன்களில் டீசலை கொண்டு செல்ல முற்பட்டபோது பொதுமக்களால் மடக்கிப் முற்றுகையிட்டுள்ளனர்..

இந்த டீசல், எரிபொருள் நிலையம் ஒன்றினூடாக பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான பல முறை இடம்பெற்றள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று (27) நள்ளிரவு 12.30 மணியளவில்  குறித்த படி ரக வாகனம் சம்மாந்துறை மணிக்கூட்டுகோபுரப் பகுதியில், கேன்களுடன் செல்வதை  எரிபொருளுக்காக காத்திருந்த பொதுமக்கள் அவதானித்தாக தெரிவித்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில்  மீண்டும் வரும் போது சம்மாந்துறைமணிக்கூட்டு கோபுரத்தடியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் குறித்த வாகனத்தை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி கேன்களை பரிசோதித்த  போது சுமார் 18 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்டிருப்பதை அறிந்த பொதுமக்களுக்கும், குறித்த வாகன சாரதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பின்னர் பொது மக்கள் பொலிஸாருக்கு தகவலை வழங்கியதன் பின் அங்கு விரைந்த சம்மாந்துறை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார்  படி ரக வாகனத்தை  கைப்பற்றி அதில் உள்ள கேன்களில் டீசல் இருப்பதை உறுதிப்படுத்திய பின்னர் சம்மாந்துறை  பொலிஸ் நிலையத்துக்கு  படி ரக வாகனம் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சம்மாந்துறை  பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49