விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு' டீசர் வெளியீடு

Published By: Digital Desk 5

27 Jun, 2022 | 01:30 PM
image

விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் 'பாயும் ஒளி நீ எனக்கு'. இதில் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கன்னட நடிகர் தனஞ்ஜெயா, எழுத்தாளர் வேலராமமூர்த்தி, நடிகர் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாகர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே எம் ஹெச் புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. இதில் விக்ரம் பிரபுவின் எக்சன் அவதாரம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்