அதிகரிக்கிறது கொள்கலன் போக்குவரத்துக் கட்டணம்

By Digital Desk 5

27 Jun, 2022 | 10:25 AM
image

கொள்கலன் போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து ஒன்றியத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.

அதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 10 சதவீதத்தால் கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக குறித்த ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து ஒன்றியத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மே மாதத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணம் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் அந்தக் கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right