கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள - பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள - பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27.06.2022) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில், " நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது." என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM