யாழ். பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ஆவா குழு புலிகளின் ஆதரவாளர்களே. புலிகளே ஆவா என்ற பெயரில் இயங்கிவருகிறார்கள். நாட்டின் உளவுப்பிரிவு அரசைக் காப்பாற்ற முயற்சிக்காமல் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 கொழும்பு கிருலப்பனை பௌத்த மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடக மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவத்தார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தையடுத்து பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு சில பேராசிரியர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிடுகிறார்கள். 

உளவுப் பிரிவின் தலைவரை நீக்க வேண்டும் என பேராசிரியர் சரத் விஜேசூரிய கூறுகிறார். 

உளவுப் பிரிவின் தலைவர் ஒரு இனவாதியல்ல. அவர் நேர்மையாகச் செயற்படுகிறார். 

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்பு ஒரு வெடிச்சத்தமும் இல்லாமல் நாட்டைப் பாதுகாத்தது உளவுப் பிரிவே என்றார்.