நாளை முதல் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

By T Yuwaraj

26 Jun, 2022 | 05:53 PM
image

(எம்.மனோசித்ரா)

எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 3 ஆம் திகதி வரை நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின் விநியோக துண்டிப்பை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபைக்கு , இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் நாளை நீண்ட நேர மின் துண்டிப்பு | Virakesari.lk

அதற்கமைய ஏ முதல் டபிள்யு வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சி.சி. வலயங்களில் ஜூலை 2, 3 ஆம் திகதிகளை தவிர, காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

எம், என், ஓ, எக்ஸ், வை, இசெட் வலயங்களில் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது  பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்