நாட்டின் தேசிய வளங்களை இந்தியா, அமெரிக்காவிற்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி - தேசிய சுதந்திர முன்னணி

By T Yuwaraj

26 Jun, 2022 | 06:20 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமூக மட்டத்தில் காணப்படும் நெருக்கடி நிலைமையினை தீவிரப்படுத்தி அதனூடாக நாட்டின் தேசிய வளங்களை இந்தியா, அமெரிக்காவிற்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்து-பசுபிக் கண்காணிப்பாளர்களை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காகவே அரச தலைவர்கள் ரஸ்யாவின் உதவியை பெற்றுக்கொள்வதை புறக்கணிக்கிறார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

ஐ.தே.க.விடம் பெரும்பான்மை இல்லை : தேசிய சுதந்திர முன்னணி | Virakesari.lk

தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்னும் ஒருவார காலத்திற்கு எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையாது என வலுசக்தி துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டது.இந்திய கடனுதவி திட்டம் நிறைவடையும் தினத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது.இந்திய கடனுதவி திட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியதாக எவ்வித திட்டங்களையும் வகுக்கவில்லை.

எரிபொருள் அடங்கிய கப்பல் நாட்டிற்கு எப்போது வருகை தரும் என்று கூட அரசாங்கத்தினால் குறிப்பிட முடியாத நிலைமை காணப்படுகிறது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.தூரநோக்கமற்ற செயற்பாடுகளினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது.பொருளாதார சவாலை வெற்றிக்கொள்ள அரசாங்கம் எவ்வித திட்டங்களும் கிடையாது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பு நாட்டின் நாளாந்த செயற்பாடுகளும் முழுமையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.சகல பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.

இன்று எப்பிரச்சினைகளுக்கும் அவர் தீர்வு காணவில்லை மாறாக நெருக்கடிகளின் அறிவிப்பாளராக செயற்படுகிறார்.

அரசாங்கம் வேண்டுமென்றே நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி இந்து பசுபிக் ஆக்கிரமிப்பை தீவிரப்படுத்தி தேசிய வளங்களை அமெரிக்கா,இந்தியா போன்ற நாடுகள் கொள்ளையடிக்கும் சாதகமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம்.

இருப்பினும் அரசாங்கம் அவற்றை கவனத்திற் கொள்ளாது மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி குறுகிய நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ரஸ்யாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.

இந்து- பசுபிக் கண்காணிப்பு தரப்பினரை பகைத்துக்கொள்ள கூடாது என்பதற்காக அரச தலைவர்கள் ரஸ்யாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.

நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றும் குறுகிய நோக்கம் எமக்கு கிடையாது.

தற்போதைய நெருக்கடி பாரதூரமானது.தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் சகல தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர் தனது பொறுப்பை முறையாக செயற்படுத்தாமலிருப்பது நாட்டின் துரதிஷ்டவசமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05