எரிபொருள் வரிசையில் காத்திருப்பதால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய வேண்டிய நிலை - இலங்கை மருத்துவர்கள் சங்கம்

Published By: T Yuwaraj

26 Jun, 2022 | 01:04 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

எரிபொருள் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள சுகாதாரத்துறையினர் எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதால் வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுகாதார அவசர நிலைமை நிலவுகிறது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் |  Virakesari.lk

 சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்தியர் சித்ரான் ஹதுருசிங்க இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியர்களால் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் இதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் வைத்தியர்கள் தமது சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

மகப்பேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர்களும் சிகிச்சைகளை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கின்றமையால்  இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எளிமையாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகள் இன்று சிக்கலானவையாக மாற்றமடைந்துள்ளன. இதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்...

2023-03-25 14:00:37
news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11